ஈஸ்ரர் தாக்குதல் : கைதான 63 பேருக்கும் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

59

ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 63 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று வியாழக்கிழமை திகதி உத்தரவிட்டார்.

ஈஸ்ரர் தினத்தன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 பேரை கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.

இவர்களில் 6 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 63 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 63 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவன் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் வழுக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு இவர்களை அழைத்துவர முடியாததை அடுத்து அவர்களை காணொளி மூலமாக எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான உத்தரவிட்டார்.