மருதமுனை கடற்கரை சடலம்-மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

114

மருதமுனை கடற்கரை பிரதேசத்தில்   உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ்  பிரிவில்  புதன்கிழமை  காலை குறித்த  சடலமாக மீட்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

இதனை தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக  மாலை  அம்பாறை வைத்தியசாலை சவச்சாலையில்  வைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பில் மட்டக்களப்பு பகுதியில் இருந்து மீனவர் ஒருவரின்  குடும்ப உறுப்பினர்கள் சில தடயப்பொருட்களை முன்வைத்து   அடையாளம் காண வந்திருந்த நிலையில் பொலிஸார் குறிப்பிட்ட உறவினர்களிடம்  வாக்குமூலங்களை பெற்றிருக்கின்றனர்.

எனவே குறித்த சடலம் தொடர்பில் அடையாளம் காணுவதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.