தேயிலை மலையிலிருந்து ஆறு வயது சிறுத்தை புலியின் உடல் மீட்பு

191

நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புளியாவத்தை பிலிங்பொனி தோட்ட தேயிலை மலையில் இருந்து ஆறு வயது மதிக்கதக்க சிறுத்தை புலியின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .

இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுத்தை புலியினை இனங்கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் விசாரனைகளை மேற்கொண்ட போது சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தை புலியின் உடல்பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுத்தை புலி  மற்றுமொரு சிறுத்தை புலியோடு சண்டை பிடித்ததன் காரணமாகவே காயங்கள் ஏற்பட்டிருக்காலமென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்