மட்டக்களப்பு நகரில் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ?

10356

-க.சரவணன்–

மட்டக்களப்பு நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து அண்மையில் மட்டக்களப்பிற்கு திரும்பிய வாவிக்கரை வீதியில் வசித்து வந்த நபரும் இவருடன் சேர்த்த குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பி.கே. ஹட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவர்கள் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு செயற்திட்ட த்தின் கீழ் வெளி மாட்டங்களில் இருந்து வருவர்களை தனிமைப்படுத்துல் நடவடிக்கையினை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.