கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் 25 ஆம் திகதி ஆரம்பம்

239

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர் இல்லம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

முன்னதாக , நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்திருந்தார்.

இதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டத்தின் கீழ் கடந்த 21 ஆம் திகதி 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ் 200 க்கும் அதிக மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.