நோர்வே “வில்-அம்பு” தாக்குதலில் ஐவர் பலி- இஸ்லாத்திற்கு மதம் மாறியவரே இத்தாக்குதலில் ஈடுபட்டவர்

209

நோர்வேயில் வில்-அம்பு தாக்குதல் நடத்தியவர் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர் என்றும் தீவிரமயமாக்கலின் வெளிப்பாடு இந்த தாக்குதல் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நோர்வேயின் காங்ஸ்பெர்க் நகரில் நேற்று புதன்கிழமை நடந்த வில்-அம்பு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டும், இரண்டு பேர் காயப்படுவதற்கும் காரணமானவர் டேனிஷ் நாட்டைச் சேர்ந்த 37 வயதான இவர் இஸ்லாத்தை தழுவியவர் எனவும் தெரியவருகின்றது.

நோர்வே பிராந்திய காவல்துறைத் தலைவர் ஓலே பிரெட்ரூப் சவெரூட், காங்ஸ்பெர்க்கில் நேற்று புதன்கிழமை வில்-அம்பு தாக்குதலுக்குப் பிறகு தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 வயதான டேனிஷ் நாட்டைச் சேர்ந்த இவர் பல்வேறு சம்பவங்கள் மற்றும் மதமாற்றம் தொடர்பாக பொலிசாருக்கு நன்கு அறியப்பட்டவர் என, இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில், சந்தேக நபர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதிலிருந்து பொலிஸ் உளவுத்துறை இவர் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்து வந்துள்ளமை தொடர்பாக இன்றைய சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் பின்ணனி குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.