வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல்

1103

– கிளிநொச்சி நிருபர்-

வடமாகாணத்திலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் அல்விஸ் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள் மற்றும்  பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதோடு வடமாகாணத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.