முந்திச்செல்ல முற்பட்ட கனரக வாகனம் – நசுங்கிய முச்சக்கரவண்டி 

736

கிளிநொச்சி நிருபர்

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று வியாழக்கிழமை ஜே. சீ பி வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முன் சென்று கொண்டிருந்த ஜே. சீ பி வாகனத்தை  முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மோதி தள்ளியுள்ளது.

குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.