துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

166

காலி – ஹீனடிகல பொல்துவ பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டினால் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உனவட்டுன – தலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.