நோர்வே “வில் அம்பு ” தாக்குதலில் பலர் உயிரிழப்பு ?

251

நோர்வேயில் – வில் அம்புடன் இனம்தெரியாத நபர் ஒருவர் இன்று புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒஸ்லோவிலிருந்து தென்மேற்கில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்ஸ்பெர்க் நகரின் மையப்பகுதியல் உள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில் இந்த சம்பவமானது நடந்ததுள்ளது .

இந்த தாக்குதலில் இறப்புகள் மற்றும் காயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸ் உள்ளூர் அதிகாரி சிவிந்த் ஆஸ் சரியான எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் மாலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரிகளினால் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் உள்ளூர் ஊடகங்கள் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளன.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை , இந்த தாக்குதலில் ஈடுபட்ட சந்தே நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.