சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபருக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்

133

திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

கல்மெட்டியாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அதே பகுதியிலுள்ள 13 வயதுடைய சிறுமியை காதலித்து வந்துள்ளதோடு திருமணம் செய்வதாக கூறி பலதடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சந்தேக நபர் தொடர்பாக சிறுமியின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.