வாகன வருமான அனுமதிப் பத்திரம் வழங்கல் வெள்ளி ஆரம்பமாகும்

557

கணினி அமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு (மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர) வாகன வருமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று மேல் மாகாண செயலகம் தெரிவித்துள்ளது.

அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.