கொழும்புக்குள் நுழையும் சாரதிகளுக்கு பொலிசரின் கோரிக்கை

70

கொழும்புக்கு வருகை தரும் போது புதிய களனி பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகள் காரணமாக பேஸ்லைன் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் நிலவும் வாகன நெரிசலைக் கருத்திற்கொண்டு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிணங்க, கொழும்பிற்குள் உள் நுழைவதற்கு கண்டி வீதியூடாக வருகை தரும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியை பயன்படுத்தாமல், நவலோக்க சுற்றுவட்டத்துடன் தொட்டகல சந்தி, டேல்ஸ் குமார மாவத்த மற்றும் புளுமென்டல் வீதியூடாக கொழும்பிற்கு வருகை தர முடியும்.

நீர்கொழும்பு வீதியூடாக வருகை தரும் வாகனங்கள் கதிரான பாலம், அளுத்மாவத்தையூடாக கொழும்பிற்குள் பிரவேசிக்க முடியும்.

பழைய அவிசாவளை வீதியின் இருமருங்கில் இருந்தும் வருகை தரும் வாகனங்கள், பலாமர சந்தி, லாயிட்ஸ் பிராட்வே வீதியூடாக வேல்ஸ் குமார மாவத்தைக்கு பயணிக்க முடியும்.