இந்திய இராணுவத் தளபதி – ஜனாதிபதி சந்திப்பு

43

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை பெறுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் பங்காளராக இலங்கை வகிக்கும் முதனிலை வகிபாகம் மற்றும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை, இந்திய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டிருந்தது.