அசாத் சாலிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

135

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அசாத் சாலி சார்ப்பில் ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணி தாக்கல் செய்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை 25 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதுடன் அன்றைய தினம் அசாத் சாலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடபவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.