கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை

2663

கட்டுப்பாட்டு விலையை மீறி சில வியாபாரிகள் சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ளை சீனிக்கு 125 ரூபாவாகவும் சிவப்பு சீனிக்கு 128 ரூபாவாகவும் அண்மையில் நுகர்வோர் அதிகார சபை சில்லறை விலையை நிர்ணயித்திருந்தது.

எவ்வாறாயினும் குறித்த விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் டொலர்கள் பற்றாக்குறையால் சீனி இறக்குமதி செய்ய முடியவில்லை என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் சீனியின் விலை 550 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் அதன் விளைவாக ஒரு கிலோ சீனி துறைமுகத்தில் இருந்து 116 ரூபாய்க்கு வெளியிடப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும் இன்று புதன்கிழமை முதல் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.