இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும்பணி முன்னெடுப்பு

95

-கல்முனை நிருபர்-

களுவாஞ்சிகுடி பிராந்தியத்திற்குட்பட்ட கிராமங்களில் இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும்பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கமைய இன்று புதன்கிழமை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 1ஆவது மற்றும் 2ஆவது தடுப்பூசிகள் ஏற்றும்பணி முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் இங்குள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் மூலம் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.