பெல்லன்வில ரஜமஹா விகாரை அருகில் கைக்குண்டு மீட்பு

80
பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமஹா விகாரையின் மதிலுக்கு அருகிலிருந்து இன்று புதன்கிழமை கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விகாரையின் பணியாளர்கள் இருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.