பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்

1009

யாழ்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன இன்று புதன்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும்  தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்தும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வது சம்பந்தமாக நாளை வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் பங்கேற்பதற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.