கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

6489

புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகள் இடம்பெறுகின்றமை காரணமாக பேஸ்லைன் மற்றும் துறைமுக நுழைவு வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகக் பொலிஸார் மாற்று வீதிகளை அறிவித்துள்ளனர்.

அதற்கமைய பின்வரும் வீதிகளை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டி வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியில் பயணிக்காமல் நவலோக்க சுற்றிவட்டத்தின் ஊடாக தொட்டலங்க சந்தி, ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி அல்லது ப்ளூமெண்டல் வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

நீர்கொழும்பு வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் கதிரான பாலம், அளுத்மாவத்தை வழியாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

பழைய அவிசாவளை வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் ஸ்டேஸ் வீதி, கொஸ்கஸ் சந்தி, லேயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியினூடாக ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி ஊடாக பிரவேசிக்க முடியும்.

மேற்படி வீதிகளை பயன்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவகையில் செயற்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.