வடமாகாண ஆளுநருக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் வாழ்த்து

81

வடமாகாண புதிய ஆளுநராக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவால் நியமனம் பெற்றிருக்கும் ஜீவன் தியாகராஜாவுக்கு புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் ஸ்ரீல ஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பதவி வகித்த இவர், தற்போது வடமாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்றிருக்கின்றார்.

குறிப்பாக வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கும் பொருளாதார ரீதியான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் ஆளுநரின் பங்களிப்பு இக்காலத்தில் அவசியமானது என மேலும் தெரிவித்துள்ளார்.