பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம்

143

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை வழங்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆரம்பத்தின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் எனின் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு வீட்டில் இருந்து சென்றதில் இருந்து மீண்டும் வீட்டிற்கு வரும் வரையிலான வேலைத்திட்டம் ஒன்றை தற்போது முதல் தயார் படுத்திக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.