வாகன வருவாய் உரிமம் வழங்கல் இரு வாரத்திற்கு இடைநிறுத்தம்

3372

மேல் மாகாணத்தின் வாகனங்களின் வருவாய் உரிமம் வழங்குவது இன்று புதன்கிழமை முதல் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை இன்று முதல் 2021 அக்டோபர் 26 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து துறையின் கணினி அமைப்புகளில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக குறித்த இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.