மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சாணக்கியனால் மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு

73

விவசாயிகளின் உர பிரச்சனை, காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் மண் அகழ்வு போன்ற விடயங்களை ஜனாதிபதி, பிரதமர் போன்றோருக்கு எமது பொதுமக்கள் சார்பாக தெரியப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகையிடம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்வைத்துள்ளார்.

ஆயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதகுறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இந் நிலையில் இரா.சாணக்கியனின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் விரைவாக தெரியப்படுத்துவதாகவும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்திருந்தார்.

குறித்த சந்திப்பின் போது 69வது பிறந்தநாளினை கொண்டாடிய ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கு, இரா.சாணக்கியன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.