இலங்கை டெஸ்ட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர வைத்தியசாலையில் அனுமதி

132

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

68 வயதுடைய இவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.