மட்டு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு 

2336

மட்டு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

க. சரவணன்
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கரைஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (05) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அன்றைய தினம் வீடு திரும்பாத நிலையையடுத்து உறவினர்கள் அவரை தேடிவந்துள்ளதுடன் சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்

இதனையடுத்து சம்பவதினமான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி சுனாமி நினைவு தூவிக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.