வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஓய்வு பெறுகிறார்

44

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ரி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

17 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஊடாக தான் பெற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் அறிவு தொடர்ந்தும் தேவைப்படப்போவதில்லை என்று குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் தனது கிரிக்கெட் வாழ்வில் இறுதியாக இருந்த ரி20 போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.