சர்வதேச டி 20 போட்டியில் குசல் ஜனித் பெரேரா இடம்பெறமாட்டார்

4096

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய முதல் 20 -20 சர்வதேச (டி 20) போட்டியில் கிரிக்கட் வீரர் குசல் ஜனித் பெரேரா விளையாட மாட்டார்.

குசல் ஜனித் பெரேரா கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் தேர்வாளர்கள் அவரை அணியில் சேர்க்க தாமதித்துள்ளனர்.

குசல் ஜனித் இறுதியாக ஜூன் மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற தொடரில் ஒரு போட்டி போட்டியில் விளையாடியிருந்ததுடன் அவ் அணிக்கு தலைவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் டி 20 போட்டி இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.