பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு வரவேற்பு

159

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலன் கொடித்துவக்கு ஆகியோர், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் இன்று மாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் இன்று மாலை 4.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்படப் பலர் விளையாட்டு வீரர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.