ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று !

132
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து  ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையில் தொற்று இல்லை  என வந்தவர்கள் மட்டுமே இன்றைய 4-வது நாள் ஆட்டதில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.