மனைவியின் அந்தரங்க உறுப்பிற்கு தையல் போட்ட கணவன் தலைமறைவு – பொலிசாரிடம் மனைவி உருக்கமான கோரிக்கை

மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு இருக்கின்றது என்ற சந்தேகத்தில் கணவன், தனது மனைவியின் அந்தரங்க உறுப்பை ஊசி நூலால் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கணவன் மீது தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என, பொலிசாருக்கு அவரது மனைவி உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்ரோலி மாவட்டத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

35 வயதான பெண் ஒருவர், தனக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகத்த தனது 55 வயது கணவர், ஊசி நூலால் தனது அந்தரங்க உறுப்பை தைத்து விட்டதாக , பெண் பொலிஸ் ஒருவரை அணுகி புகார் தெரிவித்திருந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அந்தரங்க உறுப்பில் தையல் போடப்பட்டிருந்த நூல் சிகிச்சையின் பின்னர் நீக்கப்பட்டது.

பொதுவாக சத்திரசிகிச்சைகளுக்காக பயன்படுத்தும் நூலுக்கு பதிலாக சாதாரண ஊசி மற்றும் நூலால் அப்பெண்ணுக்கு தையல் போட்டதாகவும், இதன் காரணமாக அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்னை துன்புறுத்தியதாக சில சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருக்கும் அப்பெண்ணின் கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்துள்ளதாவது.

நாங்கள் வசித்து வரும் கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக எனது கணவர் சந்தேகம் கொண்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதப்படுவோம் பலதடவைகள் என்னை அடித்தும் உள்ளார்.

இந்தநிலையில் என்னை கயிறுகளால் இறுக கட்டிப்போட்டு அந்தரங்க உறுப்புக்கு தையல் போட்டுவிட்டார். இருந்தும் என் கணவன் மீது பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்தநிலையில் தலைமறைவாகியுள்ள கணவனை பொலிசார் வலைவிரித்து தேடிவருகின்றனர்.