இன்று நள்ளிரவு முதல் விஷேட பயணக்கட்டுப்பாடு

52054
இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரம் பங்கேற்க அனுமதி வழங்கப்படுமெனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.