அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்தலில்

514

அமைச்சர் விமல் வீரவன்ச இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவரின் தனிப்பட்ட முகநூல்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் கைத்தொழில் அமைச்சில் உள்ள தமது காரியாலயம் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சின் பணிகள் வழமைப்போல் இடம்பெறும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.