ரிஷாட் வீட்டில் வேலை செய்த 5 பெண்களிடம் வாக்குமூலம் பதிவு

10287

ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த மேலும் 5 பெண்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் குறித்த வீட்டில் 11 பெண்கள் வேலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களில் 5 பேரிடம் நேற்று புதன்கிழமை வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.