கிணற்றில் இருந்து உருக்குலைந்த சடலம் மீட்பு

881

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த 36 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.