பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு

3892

ரம்புக்கனை பொலிஸ் நிலையத்திற்குரிய வாகனம் என தெரிவிக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் ஜூப் வண்டி இலங்கை பொலிஸ் அல்லது ரம்புக்கனை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமானதல்ல என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வாரியப்பொல பிரதேசத்தில் வாகனங்களை விற்பனை செய்யும் நபரொருவர் தனது ஜூப் வண்டியில் மக்களை ஏமாற்றும் நோக்கில் POLICE , RABUKKANA என பெயர் பதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜூப் வண்டியின் உரிமையாளர் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஏப்ரல் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இது தொடர்பில் மக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.