நிதிச் சீர்திருத்த சட்டமூலம் தொடர்பில் 7 திருத்தங்கள் சமர்ப்பிப்பு

176

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதிச் சீர்திருத்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 7 திருத்தங்கள் உயர்நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை சமர்பிக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த திருத்தங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை உயர்நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

உத்தேச நிதி சீர்த்திருத்த சட்டமூலத்தினை வலுவிலக்க செய்யுமாறு கோரி ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட தரப்பினர் உயர் நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.