மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

181

– வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு களுவன்கேணியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களின் நன்மை கருதி இன்று வியாழக்கிழமை உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

களுவன்கேணி கடல் பிரதேசத்தில் மீன் பிடித் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவக் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்திடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டள்ளது.

தற்போதைய கால நிலையில் கரையோர மீன்பிடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முன்னைய இவ்வாறான காலங்களில் மீன் பிடிக்கப்படும் அளவு அதிகமாக இருந்ததாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமைக்கு மாறாக கடற்தொழில் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்த அவர்கள் மாவட்டத்தில் மீனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கடல் உணவிற்கு விலை அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய லயன்ஸ கழகத் தலைவர் லயன் கே.லோகேந்திரன் மற்றும் மட்டக்களப்பு லயன் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.