தெஹிவளை மிருகக்காட்சி சாலை மீள திறப்பு

221
தெஹிவளை மிருகக்காட்சி சாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா என்பவற்றை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த மே மாதம் முதல் குறித்த இடங்கள் மூடப்பட்டிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தெஹிவளை மிருகக்காட்சி சாலை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்பதுடன், ரிதியகம சபாரி பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை திக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.