ஹிசாலினியின் மரண விசாரணையை கண்காணிக்க விஷேட குழு நியமிப்பு

732

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய சட்டமா அதிபரால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையில் இந்த குழுவை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.