ரி.எம்.வீ.பி மகளீர் அமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கலினால் கண்டன அறிக்கை

145

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் இடம்பெற்ற சிறுமியின் கொலைக்கு எதிரான இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி காரியாலயத்தில் காலை 11 மணியளவில் கண்டன அறிக்கை ஒன்று ரி.எம்.வீ.பி கட்சியின் மகளீர் அமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் உயிரிழப்புக்காக தீவிர விசாரணைகளை வலியுறுத்தியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் வீட்டு வேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், ஹிசாலினிக்கு நீதி வேண்டும், ஒரு அமைச்சராக இருந்தவர், பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு அமர்த்தியது சட்ட மீறல் எனவும் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்து கோரளைபற்று தவிசாளர் சோபா ரஞ்சித்தினால் சிறுமியின் கொலைக்கு எதிரான குறித்த கண்டன அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் சிறுவர் உழைப்பு, துஷ்பிரயோகம் என்பவற்றிற்கு எதிராக கடுமையான சிறுவர் சட்டம் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியிருப்பது முதலாவது குற்றமாகும் என மட்டு மாநகரசபையின் உறுப்பினர் எம்.கிறிஸ்டினாவினால் சிறுமியின் கொலைக்கு எதிரான கண்டன அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.