கொரோனா தொற்றின் 4 ஆவது அலை தொடர்பில் எச்சரிக்கை

246

சுகாதார வழிகாட்டல்களுக்கு இணங்க மக்கள் செயற்படத் தவறினால் நாட்டில் கொரோனா பரவலின் 4 ஆவது அலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் டாக்டர் ஹேமந்தா ஹெரத் வலியுறுத்தியுள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நோக்கங்களுக்காக மத்திரமே மக்கள் பயணிக்க வேண்டும். தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தினசரி அடிப்படையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.