உயிரிழந்த சிறுமியின் தாய் வழங்கிய பகீர் தகவல்

33670

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்தபோது இறந்த 16 வயது சிறுமியின் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தனக்கு தகவல் கொடுத்ததாக சிறுமியின் தயார் தெரிவித்துள்ளார்.

சக ஆண் தொழிலாளி விளக்குமாறு பயன்படுத்தி தன்னைத் தாக்கியதாகக் தெரிவித்த நிலையில் குழந்தையை வீடு திரும்புமாறு கோரியதாக உயிரிழந்த சிறுமியின் தாய் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் தான் வேலை செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும், கடைசியாக தன்னைத் தொடர்பு கொண்டபோது வீடு திரும்ப விரும்புவதாகவும் குழந்தையின் தாய் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக அவர் எடுத்த பல்வேறு கடன்களால் தனது மகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அந்த குறித்த தாய் தெரிவித்துள்ளார்.