கிரிக்கெட் அணியின் இலவச ஆலோசகராக மகேல ஜெயவர்தனே

734

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்தனே 2021 அக்டோபர் முதல் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணியை பயிற்றுவிக்க ஜெயவர்த்தன உதவுவதாக  தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா இதனை  உறுதிப்படுத்தியுள்ளார்.

மகேல ஜெயவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில் இப்பயிற்றுவிப்பு பணியினை இலவசமாக வழங்கவுள்ளதாக தொழில்நுட்பக் குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.