இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக்க

255

இந்தியா அணிக்கு எதிரான தொடரில்  இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ளார்

எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக சகலதுறை வீரர் தசுன் சானக்க இலங்கை அணிக்கு தலைவராக செயற்படவுள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 13, 16 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஒருநாள் சர்வதேச போட்டிகளும், எதிர்வரும் 21, 23 மற்றும் 25 ஆம்திகதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மேற்படி ஆறு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

இங்கிலாந்துடனான தொடரில் பங்கேற்று நாடுதிரும்பிய இலங்கை அணியினர் தற்போது விடுதிகளில் அவசியமான தனிமைப்படுத்தலிலுள்ளனர்.

இதனையடுத்து, எதிர்வரும் 10 ஆம்திகதி சனிக்கிழமை இலங்கை அணியினர் பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.