கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷவுக்கு ஒரு வருட போட்டித் தடை

4715

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷவுக்கு ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு இரு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 5 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் ஏனைய ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களின்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடனான 2019/2020 வருடத்துக்கான ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட இலங்கை குழுவில்  உயிர்குமிழ் முறையின் கீழ், கொழும்பில் இடம்பெறும் பயிற்சியில் பானுக்க ராஜபக்ஷ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்பார்த்த, உடற்தகுதிகளை அவர் பூர்த்திசெய்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை அவர் உயிர்குமிழி முறையின் கீழான பயிற்சிகளில் 13 பேர் கொண்ட குழாமுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.