மட்டக்களப்பு சிறைச்சாலை கூரைக்கு மேலே ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

298

மட்டக்களப்பு சிறைச்சாலை கூரைக்கு மேலே ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் சுகயீனமுற்ற நிலையில் இன்று (05) ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டு கைதிகள் சிறைச்சாலை கூரையினை உடைத்து கூரைக்கு மேல் ஏறி
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் மேலும் பலரும் கூரையின் மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஏறாவூர் பெண்கள் சந்தை வீதியைச் சேர்ந்த 38 வயதையுடைய ஈஷா லெப்பை நஜீம் என்ற நபர் மது போதைவஸ்து தொடர்பாக கைது செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் சுகனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சக சிறைக்கைதிகள் 20 இற்கு மேற்பட்டோர் குறித்த உயிரிழப்பு தொடர்ப்பில் அதிகாரிகளின் கவலையீனமே காரணமென கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.