இரண்டு பள்ளி  மாணவிகளுடன் ஆசிரியர் கைது

305

பாடசாலை மாணவிகள் இருவருடன் விடுதியொன்றில் தங்கியிருந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் நல்லதண்ணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தேகம, பன்னல பகுதியை சேர்ந்த 45 வயதான மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயதான இரண்டு மாணவிகளும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், அவர்களின் பெற்றோரிடம் அவர்களை ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.