சூட்சுமமான முறையில் பொதிசெய்யப்பட்ட கஞ்சாவுடன் 39 வயது நபர் கைது

278

-பதுளை நிருபர்-

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுணுகலை கொலனிய பகுதியில் 2 கிலோ 310 கிராம் கஞ்சா போதைப்பொருள் பசறை பொலிஸாரினால் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மாவட்ட குற்ற புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி அபோன்ஸோ மற்றும் உதவி பொலிஸ் அதிகாரி வீரசிங்க ஆலோசனைக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன வழிகாட்டலில் குற்றபுலனய்வு அதிகாரி சாமிந்த தலைமையிலான  குழுவினர் லுணுகலை கொலனிய பகுதிக்கு விரைந்து வீடொன்றை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய நிலையில் இவ் விஷேட கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது கஞ்சா பொதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் பொதிசெய்யப்பட்டு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2 கிலோ 310 கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

இதன்போது 39 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை நாளை சனிக்கிழமைபதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.