பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு பதவி உயர்வு

6331

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.